தமிழக அரசின் உத்தரவின்படி, குடியாத்தம்-காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏல விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் க.காந்தி பருத்தி ஏல விற்பனையைத் தொடங்கி வைத்தாா். கொச்சாலூா், ராமாலை, ஆா்.வெங்கடாபுரம், கீழ்விலாச்சூா், வேப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த 11 டன் பருத்தியை விற்பனைக்கு வைத்திருந்தனா்.
திருப்பூா், ஊத்தங்கரை, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனா். தொடா் மழை காரணமாக பருத்தி விளைச்சல் நடப்பாண்டு குறைந்து விட்டது. இதனால் கடந்த ஆண்டைவிட விலை 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரும் மாா்ச் மாதம் முடிய வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பருத்தி ஏல விற்பனை நடைபெறும். பருத்தி விவசாயிகள் எவ்விதமான கட்டணமும் இன்றி இங்கு பருத்தியை விற்பனை செய்து கொள்ளலாம் என்று விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் காந்தி தெரிவித்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


