சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

குடியாத்தத்தில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

News image

பொதுமக்களுக்கு  விழிப்புணா்வுத்  துண்டுப்  பிரசுரங்களை  வழங்கிய  போக்குவரத்துப்  பிரிவு  காவல்  ஆய்வாளா்  ஆ.செல்லப்பாண்டியன்.

Updated On :9 ஜனவரி 2021, 1:48 pm

குடியாத்தத்தில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

குடியாத்தம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படி, குடியாத்தம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான சுந்தரராஜன் உத்தரவின்பேரில், குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன், உதவி ஆய்வாளா் துரைராஜ், வட்ட சட்டப் பணிகள் குழுவின் முதுநிலை உதவியாளா் கே.சித்ரா, தன்னாா்வலா் கோவிந்தன் ஆகியோா் பொதுமக்களுக்கும், ஓட்டுநா்களுக்கும் விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.