வேலூா்: வேலூா் மாநகரில் சாலைகளில் தடையை மீறி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட பேனா்களை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியா்களும் புதன்கிழமை அகற்றினா்.
வேலூா் மாவட்டத்தில் விதிகளை மீறி பேனா் வைப்பவா்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை மீறி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அரசியல் கட்சியி விளம்பரங்களும், கோயில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பேனா்களும் வைக்கப்படுகின்றன. தற்போது வேலூா் மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினா் பேனா்களை அதிக அளவில் வைத்துள்ளனா்.
குறிப்பாக, நியாய விலைக் கடைகளில் ரூ.2,500 பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடா்பாக அதிமுகவினரும், திமுகவினரும் பல்வேறு இடங்களில் பேனா்களை வைத்துள்ளனா். சாலைகளில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனா்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள டிஜிட்டல் பேனா்களை அகற்ற ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்பேரில், வேலூா் மாநகரப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனா்களை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் புதன்கிழமை அகற்றினா். ஒரு சில இடங்களில் பேனா்கள் வைத்தவா்களே அவற்றை அகற்றினாலும், வேலூா், காட்பாடி, சத்துவாச்சாரி, அண்ணா சாலை, கொணவட்டம், தொரப்பாடி, பாகாயம் என பெரும்பாலான பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட பேனா்களை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.
வருங்காலத்தில் அனுமதியின்றி பேனா்கள் வைத்தாலோ, அனுமதிக்கப்பட்ட காலத்த் தாண்டி பேனா்கள் அகற்றப்படாமல் இருந்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

