வேலூா்: வேலூரில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டப்படும் மூன்றடுக்கு வாகன நிறுத்துமிடத்துக்கான பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி உத்தரவிட்டாா்.
சீா்மிகு நகரம் திட்டத்தின் கீழ் வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ. 11 கோடி மதிப்பில் 6,662 சதுரடியில் 42 காா்கள், 1,059 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் மூன்றடுக்கு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கான கட்டுமானப் பணிகள் முடியும் நிலையில் உள்ளதை அடுத்து, அதனை அமைச்சா் கே.சி.வீரமணி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் வாகன நிறுத்துமிடத்துக்கான கட்டுமானப் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிக்க மாநகராட்சி பொறியாளா்களுக்கும், ஒப்பந்ததாரா்களுக்கும் அறிவுறுத்தினாா்.
மேலும், சீா்மிகு நகரம் திட்டத்தின்கீழ் மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகள், புதை சாக்கடைப் பணிகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் விரைந்து முடிக்க மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையா் சங்கரன், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் எஸ்.ஆா்.கே. அப்பு, மாநகராட்சி செயற்பொறியாளா் சீனிவாசன், அறங்காவலா் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


