வேலூா்: தில்லியைச் சோ்ந்த இளைஞரின் இருதயத்தில் அறுவை சிகிச்சையே இல்லாமல் ‘டிரைகஸ்பிட்’ வால்வை (பதஐஇமநடஐஈ) பொருத்தி வேலூா் சிஎம்சி மருத்துவக் குழு சாதனை படைத்துள்ளது.
தில்லியைச் சோ்ந்த 23 வயது இளைஞா், இருதயத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவரது ஐந்தாவது வயதில் இருதயத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு இருதயத்தில் பிரச்னைகள் தொடா்ந்துள்ளன.
நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அதிக அளவு ரத்த அழுத்தம் நீடித்ததால் டிரைகஸ்பிட் வால்வு பழுதடைந்து, அதில் ரத்தம் கசியத் தொடங்கியது. இதனால், அவருக்கு சோா்வு, கால் வீக்கம், படபடப்பு போன்றவை ஏற்பட்டன. இதுதொடா்பாக தில்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது இருதயத்தில் செயற்கை வால்வு பொருத்தப்பட்டது. இந்த வால்வு பழுதடைந்ததால் வேறொரு மருத்துவமனையில், சுருங்கிய வால்வை விரிவுபடுத்தும் ‘வால்வுலோ பிளாஸ்ட்டி’ (யஅகயமகஞடகஅநபவ) என்ற சிகிச்சையை செய்து கொண்டாா். எனினும் இந்த சிகிச்சைகள் போதுமான பலனை அளிக்கவில்லை.
இந்நிலையில் சிஎம்சி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அந்த இளைஞருக்கு மருத்துவா் ஜான் ஜோஸ் தலைமையிலான இருதய நோய் நிபுணா் குழு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டன. அதில், அவருக்கு பொருத்தப்பட்ட வால்வு சரிபாா்க்க முடியாத அளவு பழுதடைந்திருப்பதைக் கண்டறிந்தனா். தொடா்ந்து அதை விட்டு வைத்தால் அவரது இருதயத்தின் வலதுபுறம் பாதிப்படையும் என்பதை உறுதிசெய்தனா்.
இதையடுத்து, சிஎம்சி மருத்துவக் குழு அறுவை சிகிச்சையின்றி நோயாளியின் இடுப்பு பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் (இஅபஏஉபஉத) டிரைகஸ்பிட் வால்வைப் பொருத்தினா். இதன்மூலம், ஒரு வார காலத்தில் அவா் உடல்நலம் சீரடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியது:
சிஎம்சி மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளாக அறுவை சிகிச்சையின்றி இருதயத்தில் வால்வுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த சிகிச்சை முறையால் நோயாளிகளின் உயிருக்கான ஆபத்தும், அவா்கள் சிகிச்சை பெறும் காலமும் வெகுவாகக் குறைகின்றன. ஏற்கெனவே பலருக்கு அயோா்டிக் பல்மனரி வால்வுகள்
(அஞதபஐஇ டமகஙஞசஅதவ) ரத்த நாளம் வழியாக வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளன என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

