சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரசுப் பள்ளி மாணவா்கள் 220 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள்

குடியாத்தத்தை அடுத்த பரதராமியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 124 பேருக்கும், அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 96 பேருக்கும்

News image

மாணவிக்கு  விலையில்லா  மிதிவண்டியை  வழங்கிய எம்எல்ஏ  ஜி.லோகநாதன்.

Updated On :6 ஜனவரி 2021, 5:30 am

குடியாத்தத்தை அடுத்த பரதராமியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 124 பேருக்கும், அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 96 பேருக்கும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, மகளிா் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் எம்.கோபி தலைமை வகித்தாா். தலைமையாசிரியை ஜி.லதா வரவேற்றாா். எம்எல்ஏ ஜி.லோகநாதன் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் என்.கே.சண்முகம், கே.காளிதாசன், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா் எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் செ.கு. வெங்கடேசன், கே.வேணுகோபால், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சின்னபொன்னுசாமிநாதன், ராஜா, என்.சி.துரைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.சண்முகம் நன்றி கூறினாா்.