திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளக்கோயில் அருகில் அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ளது மயிலரங்கம். இங்குதான் தையல்நாயகி உடனுறை வைத்தீசுவரர் அருள்புரிகிறார்.
முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்துவிட்டு வரும் வழியில் மயில் வாகனத்தை விட்டு இறங்கி வைத்தீசுவரப் பெருமானை வணங்கிச் சென்றதாக தல புராணம். இவ்வாறு மயில் இறங்கிச் சென்றதால் இவ்வாலயம் மயிலரங்கம் என்று அழைக்கப்படுகிறது. ஆறு இரண்டாகப் பிரிந்து செல்லும் ஆற்று இடைக்குறைப் பகுதி "அரங்கம்' என்று அழைக்கப் பெறும். இக்காரணத்தாலும் மயில்கள் அதிக அளவு இப்பகுதியில் இருப்பதாலும் இத்திருத்தலம் மயிலரங்கம் என்று அழைக்கப்படுகிறது எனலாம்.
கோயிலின் வெளிப்பிராகாரத்தில் வள்ளி- தெய்வானை உடனாய முருகப்பெருமான் சந்நிதியும், கரிவரதராஜப் பெருமான் சந்நிதியும், கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் சந்நிதியும் அமைந்துள்ளன. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் விஜய நகர அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்தவை.
கருவறை, நடுமண்டபம், முன்மண்டபத்துடன் காட்சியளிக்கிறது இவ்வாலயம். அம்மன் சந்நிதியின் வடபுறம் நாட்டிய அரங்க மண்டபம் உள்ளது. இதில் நான்கு இசைத்தூண்கள் உள்ளன.
தையல்நாயகி உடனுறை வைத்தீசுவரரை வணங்கினால் உடலும், மனமும் சீராகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
தகவலுக்கு: 94437 27539.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

