சர்வேஸ்வரன் நம்மை உய்விக்கும் பொருட்டு பல திவ்ய தேசங்களிலும் அர்ச்சாரூபியாய் அருள்பாலித்து வருகிறார். அவ்வகையில் தொட்டாசார்புரம் என்று பூர்வர்களாலும், களியப்பேட்டை என்று பிற்காலத்திலும் அழைக்கப்படும் கிராமத்தில் சுமார் 500 வருடங்கள் பழைமையான கோயிலில் மூலவர் ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாளாகவும், உற்ஸவர் ஸ்ரீருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியாகவும் சேவை சாதிக்கிறார்கள்.
இக்கிராமம் சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் செங்கல்பட்டை அடுத்த பாலாற்றின் மேற்கு கரையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீவேணுகோபாலனைத் தவிர இவ்வாலயத்தில் கார்வானத்துள்ளான், செண்பகவல்லித் தாயார், ஆண்டாள், ஆழ்வார், ஆச்சாரியர்கள், எம்பெருமானார், மணவாள மாமுனிகள் விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இக்கோயில் கட்டப்பட்டு சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்ட நாள் முதல் இங்கு எழுந்தருளும் எம்பெருமான்களுக்கு நித்திய திரிகால பூஜைகள், திருமஞ்சனம், பிரம்மோற்ஸவம் ஆகிய அனைத்தும் ஆகம முறைப்படி நடத்தப்பட்டு வந்தன. உடையவரின் உற்ஸவம் பத்து நாட்களுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி உற்ஸவம் நடைபெற்று வந்ததாகவும் கூறுவர்.
ஆனால் நாள்கள் செல்லச் செல்ல இவ்வாலயங்களுக்கான விசேஷங்கள் தடைபட்டன. கோயிலின் பல பகுதிகளும் இடிந்து விழத் தொடங்கிய நிலையில் தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல பணிகள் மீதமுள்ள நிலையில் வருகிற செப்.11ஆம் தேதி மஹாசம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. பூர்வாங்க பூஜை ஹோமங்கள் செப். 9ஆம் தேதி ஆரம்பமாகின்றன.
தகவலுக்கு: 94449 14426
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


