சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காண வேண்டிய கயிலைக் காட்சி!

அப்பர் பெருமான் கயிலைக் காட்சி கண்ட அற்புத பதியாம் திருவையாற்றில் ஆகஸ்ட் 6ஆம் தேதி அமாவாசை அன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை தருமை ஆதீனம் நடத்துகிறது.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 9:37 pm

அப்பர் பெருமான் கயிலைக் காட்சி கண்ட அற்புத பதியாம் திருவையாற்றில் ஆகஸ்ட் 6ஆம் தேதி அமாவாசை அன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை தருமை ஆதீனம் நடத்துகிறது.

அன்று காலை 11 மணிக்கு காவிரிக் கரையில் புஷ்ய மண்டபத் துறையில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரியும், தொடர்ந்து பகல் 1 மணிக்கு திருவையாறு மேட்டுத் தெருவில் உள்ள அபீஷ்ட வரத மகாகணபதி சந்நிதிக்கு எதிரில் உள்ள அப்பர்குட்டை என்று அழைக்கப்படும் திருக்குளத்தில் அப்பர் பெருமான் எழுந்தருளி அவருக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சி கொடுத்தலும் நடைபெறும்.

இரவு 9.30 மணி அளவில் பெரிய கோயிலில் உள்ள தென் கயிலாய கோபுரத்தின் முன் கயிலாயக்காட்சி நடைபெறும். அப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓதுவார் பெருமக்களும், பக்தர்களும் கூடிநின்று, அப்பர் கயிலைக் காட்சியின் போது பாடிய ""மாதர்ப் பிறைக் கண்ணியானை'' என்று தொடங்கும் பதிகத்தை பாடுவர். பின்பு பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை வழிபாடும் திருவீதி உலாவும் நடைபெறும். அன்று முழுவதும் திருவையாற்றில் ஐயாறப்பன் ஆலயத்தில் தேவார இன்னிசை முழக்கமும், அடியவர்களுக்கு இன்னமுது படைத்தலும் நடைபெறுகிறது.

தகவலுக்கு 94431 50332.