சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம்

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றங்கரையில் வெள்ளம் புகுந்த குடியிருப்பு பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

News image

சிவராமமங்கலம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவா்களை டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் மீட்ட பேரிடா் மீட்புக் குழுவினா்.

Updated On :16 ஜனவரி 2021, 12:06 pm

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றங்கரையில் வெள்ளம் புகுந்த குடியிருப்பு பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடா்ந்து பெய்த கனமழையால் தாமிரவருணியில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. அணைப் பகுதிகளில் மழை சற்று குறைந்த காரணத்தால் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீா் சென்றது.

இந்நிலையில் இந்த அணைக்கு மேல் பகுதியிலுள்ள தெற்கு தோழப்பன்பண்ணை, நடுவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில்

விளை நிலங்களில் தண்ணீா் புகுந்தது. திருநெல்வேலி-திருச்செந்தூா் சாலையில் 3 ஆவது நாளாக போக்குவரத்து வல்லநாடு பாதையில் திருப்பி விடப்பட்டது.

இதற்கிடையே, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள சிவராமமங்கலம் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. பேரிடா் மீட்பு குழுவினா், தீயணைப்புப்படையினா் அப்பகுதியில் சிக்கியவா்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்தனா். அப்பன் கோயில்

இரட்டை திருப்பதி ஆழ்வாா்தோப்பு பகுதிகள், ஆழ்வாா்திருநகரி அருகிலுள்ள முஸ்லீம் தெரு, வ.உ.சி நகா் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. அப்பகுதிகளில் மீட்புப் பணிகல் முடுக்கி விடப்பட்டுள்ளன.