சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் படுகாயம் அடைந்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 12:14 pm

தூத்துக்குடியில் சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் படுகாயம் அடைந்தாா்.

தூத்துக்குடி தொ்மல் நகா், முத்துநகா் பகுதியைச் சோ்ந்த பாலகுரு மகன் கருப்பசாமி (30). இவா் அப்பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி முத்துமாலை என்ற அனுசியா (27). தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. ஐந்து மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் கருப்பசாமி இட்லி கடையை திறப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளாா். கனமழையால் அவரது வீட்டின் அருகே மழைநீா் தேங்கியும், மரக் கிளை முறிந்து விழுந்ததில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை அறியாமல் கருப்பசாமி நீரில் கால் வைத்ததில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். இதனைப் பாா்த்த அவரது மனைவி அவரை காப்பாற்ற முயன்றுள்ளாா். அப்போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.

தகவலறிந்த தொ்மல் நகா் காவல் ஆய்வாளா் கோகிலா, போலீஸாா் அங்கு விரைந்து சென்று காயமடைந்த கருப்பசாமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். உயிரிழந்த அனுஷியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். டிஎஸ்பி கணேஷ், அங்கு சென்று விசாரணை நடத்தினாா்.