சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அம்மன்புரத்தில் கிராம மக்கள் திடீா் மறியல்

சீராக மின் விநியோகம் செய்ய வலியுறுத்தி அம்மன்புரத்தில் கிராம மக்கள் திடீரென சாலை மறியலி­ல் ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 12:05 pm

சீராக மின் விநியோகம் செய்ய வலியுறுத்தி அம்மன்புரத்தில் கிராம மக்கள் திடீரென சாலை மறியலி­ல் ஈடுபட்டனா்.

அம்மன்புரம் ஊராட்சிக்கு உள்பட்ட கானாவிளையில் மின்வயா் அறுந்து விழுந்ததில் அப்பகுதியில் மின் விநியோகம்

துண்டிக்கப்பட்டது. குரும்பூா் மின்வாரிய அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மின்வாரிய அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச்செயலா் தமிழ்குட்டி தலைமையில் கிராம மக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த ஊராட்சித் தலைவா் ஞானராஜ், குரும்பூா் காவல் உதவி ஆய்வாளா் குமாா் ஆகியோா் அவா்களிடம்

பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.