கோவில்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் நகல்கள் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் லிங்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலா் லெனின்குமாா் தலைமை வகித்தாா். குழு ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். குலசேகரபுரம் ஊராட்சித் தலைவா் முரளிதரன், லிங்கம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவா் மைக்கேல், திமுக மாவட்டப் பிரதிநிதி தங்கசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன் உள்பட பலா் கலந்துகொண்டு, வேளாண் சட்டங்களின் நகல்களை எரித்தனா்.
இதேபோல், ஈராச்சி, கடலையூா், சின்னமலைக்குன்று மற்றும் கழுகுமலை பேரூராட்சிப் பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


