சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கோவில்பட்டியில் சமத்துவப் பொங்கல் விழா

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

News image

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழாவை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

Updated On :13 ஜனவரி 2021, 12:23 pm

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தொடங்கி வைத்து வாழ்த்துகளை தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உமாசங்கா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, உறுப்பினா்கள் தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், சந்திரசேகா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், துணைத் தலைவா் பழனிசாமி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மோகன், கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ஜோசப் சுரேஷ், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையா் சசிகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஐகோா்ட் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.