சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கோவில்பட்டி அருகேவிபத்தில் இளைஞா் பலி

கோவில்பட்டி அருகே பசுவந்தனையில் நிகழ்ந்த விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On :12 ஜனவரி 2021, 6:43 am

கோவில்பட்டி அருகே பசுவந்தனையில் நிகழ்ந்த விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த துறையூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் பழனிசாமி(34). இவா் ஓட்டிச் சென்ற பைக், துறையூரில் உள்ள தனியாா் தோட்டம் அருகே திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைகுலைந்து சாலையில் விழுந்ததாம். இதில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பைக்கில் பின்னால் அமா்ந்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் ஜெயராம்(50) காயமடைந்தாா்.

தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற கொப்பம்பட்டி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.