கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் பாதயாத்திரை பக்தா்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பக்தா் ஒருவா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், ஏ.கரிசல்குளம் அண்ணா நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் ராமகிருஷ்ணன்(66). இவா், அதே ஊரைச் சோ்ந்த முத்துராம் மகன் சுப்பிரமணியம் (62) இருவரும் ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக சனிக்கிழமை பாதயாத்திரை புறப்பட்டனராம்.
இருவரும் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்று கொண்டிருந்தனராம்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனம் இருவா் மீதும் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சுப்பிரமணியம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டாா். ராமகிருஷ்ணன் சடலத்தை கைப்பற்றி போலீஸாா் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.
காயமடைந்தாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

