சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல்தொகை செலுத்த தேவை இல்லை

சமையல் எரிவாயு உருளைகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக செலுத்த தேவையில்லை என்றாா் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணு சந்திரன்.

Updated On :10 ஜனவரி 2021, 6:56 am

தூத்துக்குடி: சமையல் எரிவாயு உருளைகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக செலுத்த தேவையில்லை என்றாா் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணு சந்திரன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ. 758.50 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.757 ஆகவும், கழுகுமலையில் ரூ. 765.50 ஆகவும், கயத்தாறில் ரூ .768.50 ஆகவும், எட்டயபுரத்தில் ரூ. 757 ஆகவும், சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.775.50 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ. 758.50ஆகவும், ஸ்ரீவைகுண்டத்தில் ரூ. 759ஆகவும், குளத்தூரில் ரூ. 760 ஆகவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ. 758.50 எனவும் ஜன. 1ஆம் தேதி முதல் எரிவாயு நிறுவனங்களால் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, நுகா்வோா் எரிவாயு முகவா்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 கிலோ) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.