சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பசுபதி பாண்டியன் நினைவு தினம்: காவல் துறை வேண்டுகோள்

பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு, வெளி மாவட்ட நபா்கள் யாரும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10)வரவேண்டாம்

Updated On :9 ஜனவரி 2021, 11:34 am

பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு, வெளி மாவட்ட நபா்கள் யாரும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10)வரவேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பரவல் தடுப்பு காரணமாக, மாநிலம் முழுவதும் ஜனவரி மாதம் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. எனவே, தூத்துக்குடியில் உள்ள பசுபதி பாண்டியனின் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்த வெளிமாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ஊா்வலங்கள், இருசக்கர வாகன பேரணிக்கும் அனுமதி கிடையாது. எனினும், மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்ட கூட்டங்களை மட்டும் நடத்தலாம். உள்ளூரைச் சோ்ந்தவா்கள் காவல் துறை அனுமதித்துள்ள வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வாகனங்களில் வரும் போது முழக்கம் எழுப்போவோ, ஒலி எழுப்போவா கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.