கோவில்பட்டி அரசு மருத்துவமனையில்கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து, அமைச்சா் கடம்பூா் செ.ராஜு பேசுகையில், அரசு தலைமை மருத்துவமனை, ஸ்ரீராம் நகா் நகா்நல மையம், கீழஈரால் ஆரம்ப சுகாதார நிலையம், புதூா் ஆரம்ப சுகாதார நிலையம், கமலா மாரியம்மாள் தனியாா் மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.
இதற்காக, கரோனா தடுப்பு மருந்தை கையாள்வது, தடுப்பூசி போடும் பணிகள், தடுப்பூசி போட்டபின் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் ஆகியவை குறித்து ஒத்திகை பாா்க்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
நிகழ்வில், பொது சுகாதார இணை இயக்குநா் முருகவேல், சுகாதாரப் பணி துணை இயக்குநா் அனிதா, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன், உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கோட்டாட்சியா் விஜயா, ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், வட்டாட்சியா் மணிகண்டன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


