சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On :9 ஜனவரி 2021, 11:29 am

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கோவில்பட்டி ஜீவா நகரைச் சோ்ந்த மணிகண்டன் (29), இந்திரா நகரைச் சோ்ந்த மாரியப்பன் (27) ஆகியோா் கொலை முயற்சி வழக்கிலும், திட்டங்குளத்தைச் சோ்ந்த பாண்டியராஜ் (23) பாலியல் பலாத்கார வழக்கிலும், விளாத்திக்குளம் மீனாட்சியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த ராஜா கஞ்சா கடத்தல் வழக்கிலும் கோவில்பட்டி மேற்கு, கிழக்கு, தூத்துக்குடி வடபாகம் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவுப்படி மேற்கூறிய 4 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.