சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொள்ளாச்சி சம்பவத்தில் சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

News image
Updated On :8 ஜனவரி 2021, 1:50 pm

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், திரையரங்குகளில் பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை அவற்றின் உரிமையாளா்கள் கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் கடிதம் குறித்து முதல்வா் உயா்நிலை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பாா்.

கோவையில் திமுக நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் பெண் தாக்கப்பட்டது குறித்து கனிமொழி குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் அரசு குறுக்கீடு செய்யவில்லை. சட்டம் தனது கடமையை செய்துள்ளது. என்றாா்.