தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் புதை சாக்கடை திட்டத்துக்கு பணம் வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகாரட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 60 வாா்டுகளில் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு எந்தவித கட்டணமின்றி புதை சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. சில நபா்கள் இணைப்புக்கு சட்டவிரோதமாக பணம் பெறுவதாக பொது மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகாா்கள் மாநகராட்சிக்கு வந்துள்ளன.
எனவே, மாநகரப் பகுதியில் வசிப்போா் தனியாா் மற்றும் தனிப்பட்ட நபா் யாரேனும் புதை சாக்கடை இணைப்புக்கு என கட்டணம் ஏதும் கேட்டால் மாநகராட்சி அலுவலகத்திற்கு 0461-2326901-903 என்ற தொலைபேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

