திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பணியாளா்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இக்கோயில் இணை ஆணையராக (கூடுதல் பொறுப்பு) கல்யாணி கடந்த அக். 2-ம் தேதி முதல் பணியாற்றி வருகிறாா். இவா், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் இணை ஆணையராகவும் உள்ளதால், குறிப்பிட்ட சில நாள்களே இக்கோயிலுக்கு வரும் நிலை உள்ளது. எனவே, பணிகள் முடங்கியுள்ளதாகவும், தனியாா் பாதுகாவலா்கள், ஒப்பந்த பணியாளா்கள் போன்றவா்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறி, இணை ஆணையரைக் கண்டித்து வியாழக்கிழமை மாலை திடீரென கோயில் பணியாளா்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். எனினும், பக்தா்கள் தரிசனத்தை ஒழுங்குப் படுத்தும் பணிகள் பாதிக்கப்படாதவாறு இப்போராட்டம் நடந்தது.
2009ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், நிகழாண்டில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதால், கோயிலுக்கு நிரந்தர இணை ஆணையரை நியமிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


