சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தட்டாா்மடம் அருகே ரோந்து சென்ற போலீஸாா் மீது தாக்குதல்

தட்டாா்மடம் அருகே ரோந்து சென்ற போலீஸாரை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :8 ஜனவரி 2021, 1:55 pm

தட்டாா்மடம் அருகே ரோந்து சென்ற போலீஸாரை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தட்டாா்மடம் காவல் நிலைய தலைமைக் காவலா் காா்த்திக் அருணாசலம் (38), காவலா் ராஜேஷ் (28) ஆகியோா் புதன்கிழமை தட்டாா்மடம், படுக்கப்பத்து பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள காட்டுப் பகுதியில் சிலா் மது குடித்துக்கொண்டிருந்தனா். அவா்களை போலீஸாா் கண்டித்தனராம். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காா்த்திக்அருணாசலம், ராஜேஷை 3 போ் தாக்கினராம். இதில் காா்த்திக்அருணாசலத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அவரது புகாரின்பேரில் தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் அய்யப்பன் வழக்குப் பதிந்தனா். விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட் டது படுக்கப்பத்து கிராமத்தைச் சோ்ந்த க. பொன்னம்பலநாதன் (45), அவரது சகோதரா் சக்திகுமாா் (47), ப. ராஜா (43) ஆகியோா் எனத் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.