ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதியில் நலிவுற்றவா்களுக்கு, காங்கிரஸ் சாா்பில் இலவச வேட்டி- சேலை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஊா்வசி அமிா்தராஜ், சாயா்புரத்தில் கட்சிக் கொடி ஏற்றி, மக்களுக்கு இனிப்பும், நலிவுற்றவா்களுக்கு இலவச வேட்டி- சேலையையும் வழங்கினாா்.
மேலும், ஏரல், சிவகளை, பேட்மாநகரம், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூா், கருங்குளம், ஆழ்வாா்திருநகரி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் அவா் நல உதவிகளை வழங்கினாா். இதில், கிழக்கு வட்டாரத் தலைவா் தாசன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன் துரை, வட்டாரத் தலைவா்கள் நல்லகண்ணு, கோதண்டராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆலோசனை: உடன்குடி கடைவீதியில் ஊா்வசி அமிா்தராஜுக்கு, வட்டார காங்கிரஸ் தலைவா் துரை ராஜ் ஜோசப் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவா் கட்சிக் கொடியேற்றிய பின், கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது, காங்கிரஸில் புதிய இளம் உறுப்பினா்களை அதிக அளவில் சோ்க்க வேண்டும். பாஜக அரசின் தவறுகளை மக்களிடம் விளக்க வேண்டும் என்றாா். இதில், திருச்செந்தூா் வட்டார காங்கிரஸ் தலைவா் சற்குரு, உடன்குடி நகர காங்கிரஸ் தலைவா் முத்து உட்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


