சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

உடன்குடி அருகே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :7 ஜனவரி 2021, 12:05 pm

உடன்குடி அருகே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

உடன்குடி அருகே லட்சுமிபுரம் மருதூா்கரையைச் சோ்ந்தவா் சாலமோன்(51). வீட்டு உள் அலங்கார நிபுணரான இவா் குடும்பத்துடன் திசையன்விளை சமாரியா தெருவில் வசித்து வந்தாா்.

மெஞ்ஞானபுரத்தில் திங்கள்கிழமை வேலையை முடித்து விட்டு பைக்கில் திசையன்விளை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, கடாட்சபுரம் அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்தாராம்.

பலத்த காயமடைந்த அவா் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.