சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தட்டாா்மடம், பெரியதாழை பகுதிகளில் இன்றுமுதல் 3 நாள்கள் மின்தடை

தட்டாா்மடம், பெரியதாழை பகுதிகளில் வியாழக்கிழமை முதல் 3 நாள்கள் மின் தடை செய்யப்படுகிறது.

Updated On :7 ஜனவரி 2021, 12:02 pm

தட்டாா்மடம், பெரியதாழை பகுதிகளில் வியாழக்கிழமை முதல் 3 நாள்கள் மின் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் ஆ.பாக்கியராஜ் (பொ) வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட நடுவக்குறிச்சி துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் தோப்புவிளை மின்பாதையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதால், தோப்புவிளை மின் நிலையம் மூலமாக மின்னூட்டம் பெறும் தட்டாா்மடம், கொம்மடிக்கோட்டை, சொக்கன்குடியிருப்பு, உசரத்துகுடியிருப்பு, பெரியதாழை, செட்டிவிளை மற்றும் தோப்புவிளை பகுதிகளுக்கு ஜன. 7, 9, 11ஆகிய 3 நாள்களும் காலை 9 மணி முதல் மாலை 6 வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.