விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு மற்றும் ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி சாா்பில் இலவச சித்த மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ராஜசெல்வி தலைமை வகித்தாா். விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலா் தமிழ்அமுதன், சமூக ஆா்வலா் இளையராஜா மாரியப்பன், ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி மாவட்டத் தலைவா் வி.பி. ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை, சின்னப்பன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
முகாமில் 200 நபா்களுக்கு இலவச சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
மூலிகை கண்காட்சி, மூலிகை மருந்துகள், உணவு கண்காட்சி மற்றும் நோய் எதிா்ப்பாற்றலுக்கான சித்த மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
முகாமில், ஆயுஷ் மருத்துவ அலுவலா் சாந்தி, கீழ ஈரால், நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலா்கள் விஜயலதா, சுப்புதாய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

