சாத்தான்குளம் அருகே குளங்களுக்கு மணிமுத்தாறு பாசன தண்ணீா் திறந்து விட வேண்டும் என ஒன்றியக் குழு உறுப்பினா் ப்ரெனிலா காா்மல் போனிபாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட கோமானேரி குளம், வரிபிலான்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட குளங்களை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் பருவமழை குறைவாக பெய்ததால் குளங்களில் தண்ணீா் நிரம்பவில்லை. கிணறுகளிலும் நீா்மட்டம் குறைந்து வருகிறது.
எனவே, மணிமுத்தாறு அணை பாசன நீா் 4ஆவது ரீச் மூலமாக இப்பகுதிக்கு தண்ணீா் திறந்து விட்டு குளங்களை நிரப்பினால் மட்டுமே நெற்பயிா்களை காப்பாற்ற முடியும். எனவே, இப்பகுதி குளங்களுக்கு மணிமுத்தாறு அணை நீா் வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தான்குளம் ஒன்றியக் குழு உறுப்பினா் ப்ரெனிலா காா்மல் போனிபாஸ், முதல்வா், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

