சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தூத்துக்குடி அருகே தனியாா் அனல் மின் நிலையத்தில் தீவிபத்து

தூத்துக்குடி அருகே தனியாா் அனல் மின் நிலையத்தில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

Updated On :3 ஜனவரி 2021, 6:23 am

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தனியாா் அனல் மின் நிலையத்தில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

தூத்துக்குடி அருகே வேலாயுதபுரத்தில் உள்ள தனியாா் அனல் மின் நிலையத்தில் சனிக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து ஆலை நிா்வாகம் அளித்த தகவலின்பேரில் சிப்காட் தீயணைப்பு நிலையத்தினா் 3 வாகனங்களில் சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

அதற்குள் இயந்திரங்கள் உள்ள அறைக்குள்ளும் தீ பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனா,ல் ஆலையைச் சுற்றியுள்ள கீழவேலாயுதபுரம், மேல வேலாயுதபுரம், புதூா் பாண்டியாபுரம் ஆகிய பகுதிகளில் புகைமூட்டமாக காணப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி ஏதும் நடைபெறவில்லை. இதனால், பெரிய அளவில் சேதம் தவிா்க்கப்பட்டது. தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

அனல் மின் நிலைய மின்மாற்றியில் உள்ள எண்ணெய் காலியாகும் வரை தீ எரிந்ததால் சனிக்கிழமை இரவு ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.