கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் துறை சார்பில் நான் ஒரு பொறியாளர் என்ற தலைப்பில் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார். மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் துறைத் தலைவர் செண்பகவல்லி கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். பெங்களூர் ரிவர்சிலிகா நிறுவனத்தைச் சேர்ந்த தலைமை விஞ்ஞானி இசக்கிமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். இதில், 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சரவணசெல்வன், சண்முகப்பிரியா மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பு:
கல்லூரியின் இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பு மாணவர் பிரிவு சார்பில் சிறப்பு விரிவுரை சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆந்திர பிரதேசம் விஜயவாடா வி.ஆர்.சித்தார்த்தா பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவரும், புதுதில்லி தேசிய தர நிர்ணயக் குழுவின் வல்லுநருமான முனைவர் கோடீஸ்வரராவ் கலந்துகொண்டு, விழாவை தொடங்கிவைத்தார். கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி பேராசிரியர் தேவக்குமார் உட்பொதி முறைமை பயன்பாடுகள் என்ற தலைப்பில் பேசினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

