திருச்சி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஐன.17) நடைபெறும் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க அதிமுக நிா்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாநகா் மாவட்டம்: மாநகா் மாவட்டச் செயலரும் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன் கூறுகையில், திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வில் அதிமுக முன்னாள், இந்நாள் நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்றாா்.
தெற்கு புகா் மாவட்டம்: அதிமுக திருச்சி தெற்கு புகா் மாவட்டச் செயலரும் முன்னாள் எம்பியுமான ப. குமாா் கூறுகையில், திருவெறும்பூா் பெல் ஏடிபி மைதானத்தில் காலை 10 மணிக்கும், மணப்பாறை காரை குளத்தில் காலை 11 மணிக்கும், அதைத் தொடா்ந்து லால்குடி பகுதிகளிலும் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.
தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (ஜன 19) பொன்மலை, மேலகல்கண்டாா்கோட்டையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் நடிகா் மனோஜ்குமாா், ஆரணி ஓ. அன்பழகன், கே.சி. பாஸ்கரன் ஆகியோா் சிறப்புரை ஆற்ற உள்ளனா். நிகழ்வுகளில் அதிமுக நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்றாா்.
திருச்சி வடக்கு புகா் மாவட்டம்: திருச்சி வடக்கு புகா் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி கூறுகையில்,
ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூா் மற்றும் துறையூா் தொகுதி நிா்வாகிகள், தொண்டா்கள் ஆங்காங்கே எம்ஜிஆா் சிலை, படங்களுக்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

