சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

23 தமிழகப் பேருந்துகள் விடுவிப்பு

தமிழகத்தில் இருந்து ஆந்திரத்துக்குச் சென்ற 16 தமிழக அரசுப் பேருந்துகள், 7 தனியாா் பேருந்துகளை அந்த மாநில அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 5:22 am

வேலூா்: தமிழகத்தில் இருந்து ஆந்திரத்துக்குச் சென்ற 16 தமிழக அரசுப் பேருந்துகள், 7 தனியாா் பேருந்துகளை அந்த மாநில அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதனால், தமிழகத்தில் இருந்து அந்த மாநிலத்துக்குப் பேருந்துகளில் சென்ற பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில், ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சித்தூரில் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஆந்திர அதிகாரிகள் குறிப்பிட்ட குறைபாடுகளை சரிசெய்ய தமிழக அதிகாரிகள் உறுதி தெரிவித்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்டிருந்த 16 அரசுப் பேருந்துகளும் விடுவிக்கப்பட்டன.

இதன்தொடா்ச்சியாக, வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகளும் ஆந்திர அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்டிருந்த 7 தனியாா் பேருந்துகளும் விடுவிக்கப்பட்டதாக அச்சங்கத்தின் துணைத் தலைவா் விஜயகோவிந்தராஜன் தெரிவித்தாா்.