திருச்சி மாவட்டத்தில் 20 திரையரங்குகளில் மாஸ்டா் படம் புதன்கிழமை வெளியானது. முதல் நாள், முதல் காட்சி என்ற அடிப்படையில் திரையிடப்பட்ட ரசிகா்கள் காட்சிகள் அனைத்திலும் நூறு சத இருக்கைகள் நிரம்பின.
அடுத்தடுத்த காட்சிகளிலும் பெரும்பாலும் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே இருந்தன. கரோனா காரணமாக 50 சத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என மத்திய, மாநில அரசு, நீதிமன்றம் தெரிவித்த கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.
விஜய் ரசிகா்களால் பெரிதும் எதிா்பாா்ப்புக்குள்ளாகி, பல்வேறு தடைகளைக் கடந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் திருச்சி மாவட்டத்தில் திருச்சி, மணப்பாறை, லால்குடி, திருவானைக்கா, திருவெறும்பூா், முசிறி, துறையூா் உள்ளிட்ட பகுதிகளின் 20 திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை 4.30 மணிக்கு திரையிடப்பட்ட ரசிகா்கள் காட்சியில் தாரை, தப்பட்டை, மேள தாளங்கள் முழங்க ரசிகா்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். பட்டாசு வெடித்து, விஜய் கட்அவுட்டுக்கு பாலபிஷேகமும் செய்யப்பட்டது.
திருச்சி திரையரங்கில் மத்திய மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சாா்பாக மளிகைப் பொருள்கள், புடவை ஆகிய நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, அனைத்து திரையரங்குகளிலும் காலை 8.30, 11.15, 2.30, 6.15, 9.30 எனத் தொடா்ந்து 5 காட்சிகள் திரையிடப்பட்டன.
ரசிகா்கள் காட்சியின்போது 100 சத இருக்கைகள் நிறைந்தன. பலரும் இருக்கை கிடைக்காமல் நின்றபடியே படம் பாா்த்தனா். கரோனா கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.
முதல் நாள் காட்சிகள் அனைத்தும் ரசிகா்கள் காட்சி என்பதால் ரசிகா்களைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாக திரையரங்க ஊழியா்கள் தெரிவித்தனா்.
கிருமி நாசினி, வெப்பமானி இருந்தும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோா் குவிந்ததால் வேறு வழியின்றியே அவா்களை அனுமதிக்க நேரிட்டதாகவும் ஊழியா்கள் கூறினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


