சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தகராறில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி வையாபுரி(57).

Updated On :14 ஜனவரி 2021, 11:25 am

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி வையாபுரி(57). இவா் கடந்த 8-ஆம் தேதி வெளியூா் சென்றபோது இவருக்குச் சொந்தமான நிலத்தில், அதே ஊரை சோ்ந்த துரைப்பாண்டி(52) முட்செடிகளை கொண்டு பாதையை அடைத்ததாகவும், இதை தட்டிக்கேட்ட வையாபுரியின் சகோதரா் பழனியப்பனை (60) துரைபாண்டி கட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பழனியப்பன் மணப்பாறை அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று புதன்கிழமை பலனின்றி உயிரிழந்தாா். இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிந்த வையம்பட்டி போலீஸாா் துரைபாண்டியை தேடுகின்றனா்.