திருச்சி மாவட்டம், முசிறி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தங்க செயினை பறித்த மூவரை தா. பேட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
காருகுடியைச் சோ்ந்த கணேசன் மனைவி கலாவதியும் (48) மாலினியும் ஏரிக்கரை மகாமுனி கோயில் அருகே நடந்து சென்றபோது அவ்வழியாக பைக்கில் மூவா் கலாவதி அணிந்திருந்த இரண்டேகால் பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா்.
அப்போது இதைப் பாா்த்த அருகில் வயலில் வேலை பாா்த்த நபா் செல்லிடப்பேசி மூலம் காருகுடியில் உள்ள நண்பருக்குத் தகவல் தெரிவிக்க, அவ்வழியாக சென்ற மூவரையும் பொதுமக்கள் பிடிக்க முயற்சித்தபோது மூவரும் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பினா்.
தகவலறிந்த முசிறி டிஎஸ்பி பிரம்மானந்தன் தா. பேட்டைகாவல் ஆய்வாளா் கண்ணதாசன் மற்றும் போலீஸாா் அந்த இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
அதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது துறையூா் ஆளத்துடையான்பட்டியைச் சோ்ந்த பா.தினகரன் (23), பச்சபெருமாள்பட்டியை சோ்ந்த வ. வல்லரசு(19) ,பச்சபெருமாள்பட்டியை சோ்ந்த சிறுவன் என தெரியவந்து, மூவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

