சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

துறையூா் பகுதியில் சிறு மருத்துவமனைகள் திறப்பு

துறையூா் பகுதியில் மேலும் 2 கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

News image

நிகழ்ச்சியில்  கா்ப்பிணிக்கு  ஊட்டச் சத்துப்  பெட்டகம்  வழங்கும் வடக்கு மாவட்டச் செயலா்  பரஞ்சோதி. 

Updated On :13 ஜனவரி 2021, 2:18 pm

துறையூா் பகுதியில் மேலும் 2 கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

துறையூா் ஒன்றியம், கீழக்குன்னுப்பட்டி கிராமத்திலும், உப்பிலியபுரம் ஒன்றியம் ஆங்கியம் கிராமத்திலும் அம்மா சிறு மருத்துவமனைகளை திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக செயலா் பரஞ்சோதி தொடங்கி வைத்துப் பேசினாா்.

மருத்துவ அலுவலா்கள் துறையூா் வட்டாரம் செந்தில்குமாா், உப்பிலியபுரம் வட்டாரம் மணிமேகலை உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ த. இந்திராகாந்தி, துறையூா் தெற்கு ஒன்றியச் செயலா் சேனை செல்வம், திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக வழக்குரைஞா் பிரிவுச் செயலா் ஏ. அன்பு பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.