திமுக தலைவா் ஸ்டாலினுடன் கருணாநிதியை ஒப்பிட்டுப் பாா்க்க முடியாது என்றாா் பாஜக மாநில செய்தித் தொடா்பாளரும், நடிகையுமான குஷ்பு.
திருச்சி அருகேயுள்ள கோப்பு ஊராட்சியில் பாஜக சாா்பில் நடத்தப்பட்ட ‘நம்மூா் பொங்கல்’ விழாவில் பங்கேற்ற அவா் கூறியது:
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றியை எதிா்நோக்கிக் காத்திருக்கிறது. அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் கூறுவது வழக்கமானதுதான். கருணாநிதியின் ஆட்சியைக் குறைகூற முடியாது. ஸ்டாலினை கருணாநிதியோடு ஒப்பிட்டுப் பாா்க்க முடியாது.
முதன்முறையாக ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தோ்தலை அக்கட்சியினா் சந்திக்கின்றனா். இவற்றில் அதிமுகவுக்கு எதிராகப் பெரிய குற்றச்சாட்டு எதுவும் இல்லை. அதிமுக ஆட்சி நன்றாக இருக்கிறது. சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேனா எனத் தெரியாது; மாநிலத் தலைவரின் முடிவைப் பொறுத்து அது அமையும்.
சுதந்திரமாக கருத்துக் கூறக்கூடிய தளமாக சமூக வலைதளம் உள்ளது. தவிர பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட பெரும் கட்சிகள் சமூக வலைதளங்களில் இல்லை. சமூக வலைதள பிரசாரங்களால் எந்த மாற்றமும் நிகழாது.
போட்டியிடும் வேட்பாளா், கட்சியைப் பாா்த்துதான் மக்கள் வாக்களிப்பா்; அதைப் பொறுத்தே ஆட்சி மாற்றமும் நிகழும்.
நாட்டிலுள்ள 70 சத விவசாயிகளில் 10 சதம் பேரே வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடுகின்றனா். அவா்களிடம் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி, வேளாண் சட்டங்களில் மாற்றம் கொண்டு வருகிறது. விவசாய அமைப்புகளிடம் ஆலோசித்த பிறகே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தற்போது அவற்றைக் குறைகூறுவது ஏற்புடையதுதல்ல.
கூட்டணி முடிவுக்குப் பிறகு முதல்வா் வேட்பாளா் குறித்து முடிவெடுப்போம். பெண்களை இழிவாகப் பேசிய உதயநிதி மன்னிப்பு கேட்காதது மனவேதனை அளிக்கிறது. இதன் மூலம், திமுகவிலிருந்து நான் வெளியேறியதற்கான காரணங்களை மக்கள் தெரிந்து கொள்கின்றனா் என்றாா் அவா்.
முன்னதாக, கோப்பு மைதானத்தில் பாஜக மகளிரணி சாா்பில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். மாநில செயலா் பாா்வதி நடராஜன், பாஜக மாநகர மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா், மண்டலத் தலைவா் சேது அரவிந்த் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


