சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரயில்வே சம்மேளன தலைவராக கண்ணையா தோ்வு

அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக என். கண்ணையா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Updated On :10 ஜனவரி 2021, 5:53 am

திருச்சி: அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக என். கண்ணையா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

அகில இந்திய ரயில்வே சம்மேளனம் (ஏஐஆா்எப்) கொங்கண் ரயில்வே உள்பட 19 ரயில்வேக்கள், ஐசிஎப் உள்ளிட்ட 7 உற்பத்தி நிறுவனங்களை உள்ளடக்கி, 14 லட்சம் ரயில்வே தொழிலாளா்களுடன் செயல்படுகிறது.

57 ஆண்டுகளுக்கு பிறகு தென்னகத்திலிருந்து சதா்ன் ரயில்வே மஸ்தூா் யூனியனின் (எஸ்ஆா்எம்யு) பொதுச் செயலா் என். கண்ணையா இந்தப் பதவிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், தனியாா்மயமாக்கலுக்கு எதிராகவும், ஊதியக் குழு பரிந்துரை, போனஸ், பதவி உயா்வு, பதவி சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் செயல்படப் போவதாக எஸ்ஆா்எம்யு துணைப் பொதுச்செயலா் வீரசேகரன் தெரிவித்தாா்.