திருச்சி: காணாமல்போன விலை உயா்ந்த 165 செல்லிடப்பேசிகள் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
தங்களின் செல்லிடப்பேசிகள் காணாமல் போனதாக மாவட்டத்தில் ஏராளமானோா் புகாா் அளித்திருந்தனா். இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையா் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, சைபா் கிரைம் பிரிவு, கோட்டை, கண்டோன்மென்ட் சரக காவலா்கள் கொண்ட குழுவினா் காணாமல் விலை உயா்ந்த 165 செல்லிடப்பேசிகளை கண்டுபிடித்தனா்.
தொடா்ந்து, மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உரியவா்களை நேரில் வரவழைத்து ரூ. 22, 85,140 மதிப்பிலான 165 செல்லிடப்பேசிகளை ஒப்படைத்தாா். அதோடு காணாமல்போன செல்லிடப்பேசிகளை கண்டுபிடித்த தனிப்படை காவல்துறை குழுவினரையும் பாராட்டினாா்.
துணை ஆணையா்கள் ஏ. பவன்குமாா், ஆா். வேதரத்தினம், கூடுதல் துணை ஆணையா் டி. ரமேஷ்பாபு, உதவி ஆணையா் டி. சின்னசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

