சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியும் கால்நடைகள்

திருச்சி மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி திணறுகிறது.

Updated On :9 ஜனவரி 2021, 5:54 am

திருச்சி மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி திணறுகிறது.

திருச்சி மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகளை சாலைகளில் திரிய விடக்கூடாது. மீறினால் அவற்றை வளா்ப்போரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி பலமுறை அறிவிப்பு வெளியிட்டது. என்றாலும், கால்நடைகளை வளா்ப்போா் இதைக் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதனால் அனைத்துப் பகுதிகளிலும் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி நிா்வாகம் திணறுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்கள் கூறுகையில், உரிய அறிவிப்பு செய்தும், அபராதம் விதித்தும், உரிமையாளா்களின் மெத்தனத்தால் தொடா்ந்து கால்நடைகள் சாலைகளில் திரிகின்றன. மாநகா் முழுவதும் திரியும் நூற்றுக்கணக்கான கால்நடைகளைப் பிடித்து அடைத்து வைக்க போதுமான இடவசதியும் இல்லை.

வாகனங்களில் அவற்றை ஏற்றி வேறு இடங்களில் கொண்டு போய் விடுவதும் சாதாரணப் பணி இல்லை. மாடுகள் மட்டுமின்றி குதிரைகள், நாய்களும் அதிகளவில் திரிகின்றன. எனவே அவற்றை என்ன செய்வதெனப் புரியவில்லை என்கின்றனா்.