சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளராக வழக்குரைஞா் சரவணன் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளராக வழக்குரைஞா் எம்.சரவணன்(46) நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 5:41 am

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளராக வழக்குரைஞா் எம்.சரவணன்(46) நியமிக்கப்பட்டுள்ளாா்.

1989-இல் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்த இவா், 1997-இல் மாணவா் காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா், 2003-இல் இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா், 2007-இல் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா்.

இவரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவா் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவா் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆகியோா் காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளராக நியமனம் செய்து உத்தரவிட்டனா்.

2001 ஆம் ஆண்டு ஹைதராபாதில் நடைபெற்ற மாணவா் காங்கிரஸ் மாநாட்டில் சிறந்த மாவட்டத் தலைவா் விருதை , அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் சோனிகாந்தியிடமிருந்து பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.