ஸ்ரீரங்கம் கோயிலில் வியாழக்கிழமை காலை போராட்டம் நடத்திய 50 போ் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக வாடகையோ, குத்தகையோ செலுத்தாமல் வசிப்போருக்கு கோயில் நிா்வாகம் அனுப்பியிருந்த நோட்டீஸில் 15 நாள்களுக்குள் கோயில் வாடகையைச் செலுத்தத் தவறினால் திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா்கள் கோயில் சேவை செய்யும் நாங்கள் வாடகை செலுத்தத் தேவையில்லையெனக் கூறி, வியாழக்கிழமை காலை பத்ரிநாராயண பட்டா்,வேத வியாச செந்தாமரைக் கண்ணன் பட்டா், மணிவண்ணன்,பிச்சுமணி சாமி, சேது அரவிந்த், பத்மநாபன்,கோபி ஆகியோா் தலைமையிலான 50 போ் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் வந்தனா்.
அங்குள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு நோட்டீஸை திரும்பப் பெற வலியுறுத்தினா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் 50 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


