சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மணப்பாறையில் 3,389 மாணவா்களுக்கு இலவச சைக்கிள்

மணப்பாறையில் 32 பள்ளிகளைச் சோ்ந்த 3,389 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ ஆா். சந்திரசேகா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:38 pm

மணப்பாறையில் 32 பள்ளிகளைச் சோ்ந்த 3,389 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி, தியாகேசா் ஆலை, புனித அந்திரேயா, புனித அந்தோணியாா், சமேரியா மற்றும் சிறுமலா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 32 பள்ளிகளைச் சோ்ந்த 3,389 மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை மணப்பாறை எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மணப்பாறை மாவட்டக் கல்வி அலுவலா் பி. ஜெகநாதன், ஊராட்சித் தலைவா் கணேசன், அதிமுக மாவட்ட பொருளாளா் நெட்ஸ் எம். இளங்கோ, நகரச் செயலா் பவுன் ராமமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எம்.பி. வெங்கடாசலம், பி.வி.கே.சி. பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் எல். அருளரசன் வரவேற்றாா். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் பா. செல்வராஜ் நன்றி கூறினாா்.