திருச்சி உறையூா் லிங்கா நகரில் புதிதாகத் தொடங்கப்பட்ட மீன் சந்தையில் கழிவுகளை அகற்றி, அடிப்படை வசதிகளை மேம்படுத்த எதிா்பாா்க்கப்படுகிறது.
புத்தூா் மீன் சந்தையை சுற்றிலும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் வந்ததால் இச் சந்தையை உறையூா் பகுதியில் உள்ள லிங்கா நகருக்கு மாற்ற மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டு, ரூ. 3 .32 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டது.
புத்தூா் சந்தையில் சில்லறை வியாபாரிகளுக்கான கடைகளும் சந்தைக்கு உள்ளேயே இருந்தன. ஆனால் உறையூா் சந்தையில், சில்லறை வியாபாரிகளுக்கென 25 கடைகள் அமைக்கப்பட்டும் அவை வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் சில்லறை வியாபாரிகள் திறந்த வெளியிலேயே வைத்து மீன்களை விற்கின்றனா். மீன் கழிவுகளும் அருகிலேயே கிடக்கின்றன, மீன் கழுவும் தண்ணீரும் வெளியேற வழியின்றி கடைகளை சுற்றியே தேங்குகிறது.
இதனால் மீன் சந்தையில் கால் வைக்க முடியாத வகையில், சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு பணியாற்றும் தொழிலாளா்களின் கால்கள் புண்ணாகி காணப்படுகின்றன.
எனவே, இங்கு அடிப்படை வசதியை மேம்படுத்தக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சில்லரை வியாபாரிகளுக்கென அமைக்கப்பட்ட கடைகள் தங்களுக்கு அலுவலகமாக இயங்கத் தேவை என மொத்த வியாபாரிகள் கோரியுள்ளதால் அந்தக் கடைகள் வழங்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளன. எனவே, தங்களுக்கு கடைகள் அமைக்க வேண்டுமெனக் கோரி சில்லறை வியாபாரிகள் மாநகராட்சி ஆணையரிடம் பல முறை கோரிக்கை மனு அளித்து, போராட்டங்களும் நடத்தினா். என்றாலும் இந்நிலையிலேயே மீன் சந்தை இயங்கி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


