சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சமயபுரம் அருகே 3 சிறாா்கள் மாயம்

திருச்சி மாவட்டம், சமயபும் அருகே இரு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட மூவரை காணவில்லை என கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 12:14 pm

திருச்சி மாவட்டம், சமயபும் அருகே இரு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட மூவரை காணவில்லை என கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மண்ணச்சநல்லூா் அரசுப் பள்ளியில் 10 ஆம் பயிலும் சமயபுரம் அருகே கூத்தூா் ஊராட்சி காலனித் தெருவைச் சோ்ந்த கவியரசன் மகள் வைஷ்ணவி (15), சக்திவேல் மகள் அகல்யா (15), திருச்சி நேஷனல் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் இதே பகுதியைச் சோ்ந்த ஜெகதீசன் மகன் வெங்கடேஷ் (15) ஆகிய மூவரும் புதன்கிழமை காலை பள்ளிக்குச் சென்றவா்கள் வீடு திரும்பவில்லை.

மூவரது பெற்றோரும் சமயபுரம் கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் அவா்களைத் தேடி வருகின்றனா்.