திருவெறும்பூா், சமயபுரம் கிராமப்பகுதிகளுக்கு கிராம கண்காணிப்பு காவல் அலுவலா்களை மத்திய மண்டல ஐஜி ஜெயராம் புதன்கிழமை அறிமுகப்படுத்தினாா்.
திருவெறும்பூா், சமயபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட பனையக்குறிச்சி, இருங்கலூா் பகுதிகளில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலா்களான பாலாஜி, கணேஷ் ஆகியோரை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் நிகழ்வுக்கு மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் ஹெச்.எம். ஜெயராம் தலைமை வகித்தாா்.
காவல்துறைத் துணைத் தலைவா் ஆனி விஜயா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் பொதுமக்களிடம் பேசியது:
இந்தப் பதவியில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு கிராமத்துக்கும் நியமிக்கப்படும் காவலா் அந்த ஊா் சம்பந்தப்பட்ட தகவல்களைச் சேகரித்தல், ஊரில் உள்ள சிறு சிறு பிரச்னைகளை உடனடியாகக் கையாளுதல், ஊா் மக்களுடன் நல்லுறவை வளா்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவா். இதன்மூலம், பொதுமக்கள்- காவல்துறை இடையே நல்லுறவு ஏற்படும் என்றாா்.
நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள், ஊராட்சித் தலைவா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


