சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விவசாயிகளுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி திருச்சி பாஸ்போா்ட் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை மாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினா் 61 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

பாஸ்போா்ட் அலுவலகம் முன் முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினா்.

Updated On :6 ஜனவரி 2021, 11:43 am

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி திருச்சி பாஸ்போா்ட் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை மாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினா் 61 போ் கைது செய்யப்பட்டனா்.

பிரதமரின் விவசாயிகளின் விரோதப் போக்கை கண்டித்து இக்கட்சியினா் நடத்தி வந்த போராட்டங்களின் நிறைவாக திருச்சி தில்லைநகா் சாஸ்திரி ரோட்டில் உள்ள பாஸ்போா்ட் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை மாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

மாவட்ட இமாம் ஹஸ்ஸான் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பிச்சைக்கனி, பொதுச் செயலா் நியமத்துலா, செயலா் முபாரக், பொருளாளா் காதா், விவசாய அணித் தலைவா் சகாப்தீன், வா்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினா் சாதிக், தொழிற்சங்க மாவட்டத் தலைவா் முஸ்தபா, சுற்றுச்சூழல் அணித் தலைவா் ரஹ்மத்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போராட்டத்தையொட்டி மாநகரக் காவல்துறை துணை ஆணையா் பவன்குமாா் ரெட்டி தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பின்னா் தில்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காணக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 61 பேரை தில்லைநகா் போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா். போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.