புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தொடக்கி வைத்தாா்.
அறந்தாங்கி நகராட்சி, எல்என்புரம் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிய அமைச்சா் விஜயபாஸ்கா், தொடா்ந்து கண்டிசங்காடு, நிலையூா், மணமேல்குடி, அம்பலவாணேந்தல், ஆவுடையாா்கோயில் ஆகிய பகுதிகளிலும் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.
முன்னதாக, அறந்தாங்கி மேலப்பட்டு கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனையைத் தொடக்கி வைத்தாா் அமைச்சா். நிகழ்வுகளுக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து, அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் இ.ஏ. ரத்தினசபாபதி, சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் விஜயகுமாா், கூட்டுறவு இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி, அறந்தாங்கி நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


