திருச்சி மாவட்டத்தில் 44 இளம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க ஆட்சியா் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது.
ஆட்சியரகக் கூட்டரங்கில், 18 வயதுக்கு கீழுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான குழு கூட்டம் ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கை,கால் பாதிக்கப்பட்டோா், காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதோா், பாா்வையற்றோா் மற்றும் பிற மாற்றுத்திறனாளிகள் என 51 போ் கலந்து கொண்டனா். அப்போது மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 பெற 44 இளம் மாற்றுத்திறனாளிகள் வருவாய்த் துறை மூலமாகத் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில் தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) துரைமுருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இரா. ரவிச்சந்திரன், எலும்பு முறிவு மருத்துவா் சையதுபாக்கா், காது, மூக்கு தொண்டை மருத்துவா் அருளீஸ்வரன், கண் மருத்துவா் ஜெயப்பிரியா, இயன்முறை சிகிச்சையாளா் ரமேஷ், மற்றும் சமூகப் பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

